தமிழகத்தில் 2017ம் ஆண்டு முதல் சுமார் 4 ஆண்டுகள் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக பதவி வகித்து இருந்தார். அப்போது ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு மருத்துவ கல்லூரி தொடங்குவதற்கு முதல்வரின் கட்டுப்பாட்டில் இருந்த பொதுப்பணித்துறைக்கு மத்திய மாநில அரசுகள் மூலம் நிதி ஒதுக்கப்பட்டது.
இதன் அடிப்படையில் திண்டுக்கல், விருதுநகர் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் மருத்துவக் கல்லூரி கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன. தற்போது இந்த கட்டிட பணியில் எடப்பாடி பழனிச்சாமி கோடிக்கணக்கில் ஊழல் செய்துள்ளதாக திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த ராஜசேகரன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளார். இதில் ராமநாதபுரத்தில் 11.76 சதுர அடியில் அமைய வேண்டிய மருத்துவ கல்லூரி கட்டிடம் 9.99 சதுர அடியில் தான் கட்டப்பட்டு உள்ளது.
இதுபோன்று கிருஷ்ணகிரியிலும் முறைகேடு நடந்ததாக புகார் மனுவில் குறிப்பிட்டு இருந்தார். இதனை விசாரித்த நீதிபதிகள் எடப்பாடி பழனிச்சாமி எதிர்க்கட்சி தலைவர் என்பதால் தமிழக அரசிடம் உரிய அனுமதி பெற்று நடவடிக்கை எடுக்க லஞ்ச ஒழிப்புத் துறைக்கு உத்தரவிட்டனர். இந்நிலையில் இது தொடர்பான விரிவான விசாரணை மேற்கொள்ள லஞ்ச ஒழிப்புத் துறைக்கு தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
© Behindglitz.com