அருண் விஜய் நடித்த ‘தடையற தாக்க’படம் மூலம் அறிமுகமானவர் ரகுல் ப்ரீத் சிங். ‘என்னமோ ஏதோ’ என்கிற படத்தில் கவுதம் கார்த்திக்கு ஜோடியாக நடித்தார்.
எனவே, தெலுங்கு சினிமா பக்கம் சென்றார். அங்கு முன்னணி நடிகர்களுடன் நடித்து தனக்கென ஒரு மார்க்கெட்டை உருவாக்கினார். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய ஸ்பைடர் படம் மூலம் தமிழில் மீண்டும் நடித்தார். மகேஷ்பாபு நடித்த அப்படம் தோல்வியை தழுவியது.
அடுத்து, கார்த்தி நடித்த ‘தீரன் அதிகாரம் ஒன்று’ படத்தில் நடித்தார். அது என்னவோ அவர் நடிக்கும் படங்கள் தமிழில் பெரிய ஹிட் ஆகவில்லை. அவரும் தேவ், என்.ஜி.கே என சில படங்களில் நடித்து பார்த்தார். எல்லாமே தோல்விப்படங்கள்.
எனவே, தெலுங்கு படங்களில் மட்டும் நடித்து வந்தார். கடந்த ஒரு வருடமாக பாலிவுட் படங்களில் நடிக்க துவங்கியுள்ளார். ஒருபக்கம் கவர்ச்சியான உடையில் போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். மேலும், ஜிம்மில் உடற்பயிற்சி செய்யும் வீடியோவையும் அவ்வபோது பகிர்ந்து வருகிறார்.
© Behindglitz.com