Cinema news: உங்களுக்குதான் அது பெஸ்ட்…பாராட்டிய கமல்… 28 வருடம் கழித்து வெளியான உண்மை…. Behind glitz

0
90


தமிழ் சினிமாவில் வில்லனாக அறிமுகமாகி அதன் பின் பல்வேறு கிராமத்து திரைப்படங்களில் தனது தனித்துவமான நடிப்பின் மூலம் நல்ல நடிகர் என்கிற பெயரை பெற்றவர் நடிகர் நெப்போலியன். இவர் நடிப்பில் கதாநாயகனாக நடித்து பெரிய வெற்றியடைய திரைப்படம் சீவலப்பேரி பாண்டி.

இந்த திரைப்படத்தை இயக்குனர் பிரதாப் போத்தன் இயக்கியிருந்தார். ராஜசேகரன் இந்த படத்தின் கதைக்களத்தை அமைத்திருந்தார். இந்த திரைப்படத்தை பார்த்த கமல்ஹாசன் நெப்போலியனின் நடிப்பை மிகவும் பாராட்டிப் பேசி இருந்தாராம்.

ஆம் , முதலில் இந்தக்கதை என்னிடம்தான் வந்தது. இது சிறுகதையாக இருக்கும்போதே அவர்கள் அதற்கு ஒரு உருவம் கொடுத்து இருந்தனர். அதனை நீங்கள் கச்சிதமாக செய்து முடித்துள்ளீர்கள் . என்னைவிட இந்த கதாபாத்திரம் உங்களுக்கு மிகவும் கச்சிதமாக பொருந்தி போயுள்ளது என கூறியுள்ளார்.

உடனே நெப்போலியன் தங்களுடன் நடிக்கவேண்டும் என்று கமலிடம் கூற , கமல் மூன்று வருடங்கள் க ழித்து ஒரு வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க கேட்டுள்ளார். ஆனால், நெப்போலியன் அதை மறுத்துள்ளார். ஐந்து படங்களுக்கும் மேல் ஹீரோவாக நடித்து விட்டேன். அதனால், வில்லன் வேடம் வேண்டாம் சார் என மறுத்துவிட்டாராம்.

பிறகுதான் 2004ஆம் ஆண்டு “விருமாண்டி” திரைப்படத்தில் நல்லம நாயக்கர் எனும் கதாபாத்திரத்தில் கமல்ஹாசன் உடன் இணைந்து நெப்போலியன் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார்.

இந்த தகவலை      அண்மையில் நெப்போலியன் ஒரு வீடியோவில் பேட்டியில் தெரிவித்து இருந்தார்.



© Behindglitz.com