எதிர்நீச்சல் சீரியல் இப்பொழுது ரசிகர்கள் இடத்தில் ஏகப்பட்ட வரவேற்பை குவித்து வருகிறது. ஆரம்பிக்கப்பட்ட கொஞ்ச நாளிலேயே டிஆர்பி ரேட்டிங்கிலும் எகிறி விட்டது. பெண்கள் படும் பாட்டை மையமாக கொண்டு எடுக்கப்பட்டதால் தான் இந்த அளவிற்கு ரீச் கொடுத்துள்ளது. மேலும், நடிக்கும் பிரபலங்களும் பின்னி பெடலெடுத்து விடுகின்றனர்.
ஆளாளுக்கு போட்டி போட்டுகொண்டு நடித்து வருகின்றனர். குணசேகரனும் சரி, நந்தினி, ஈஸ்வரி, ரேணுகா என பலரும் தனது எதார்த்தமான நடிப்பால் சீரியலை தூக்கி நிறுத்தியுள்ளனர். இப்படி இருக்க இப்பொழுது நந்தினி கதாபாத்திரத்தில் நடிக்கும் ஹரி பிரியா குறித்த முக்கிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது.
அதாவது இவருக்கு விவாகரத்து ஆகி, இருவரும் பிரிந்து இருப்பது நாம் அனைவர்க்கும் தெரியும். இந்நிலையில் தான் சன் டிவியில் வணக்கம் தமிழாவை தொகுத்து வழங்கி வரும் ஆசாரும் ஹரிப்ரியாவும் நண்பர்கள். இந்நிலையில் இருவரும் காதலித்து வருவதாக செய்திகள் வைரலாகி வருகிறது. ஆனால் இதுகுறித்து இருவரும் எந்த தகவலையும் வெளியிடவில்லை.
© Behindglitz.com