தன்னுடைய கொஞ்சும் இலங்கை தமிழில் தமிழக மக்கள் அனைவரையும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் தன் பக்கம் திரும்ப பார்க்க வைத்தவர் நடிகை லாஸ்லியா. இலங்கை தமிழ் பெண்ணான இவர் அங்கு செய்தி வாசிப்பாளராக தன் கெரியரை துவக்கியுள்ளார்.
மீடியாவில் இன்னும் தன்னுடைய தனித்துவத்தை காட்ட வேண்டும் என்பதற்காக விஜய்டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக களம் இறங்கினார். அங்கு அவர்க்கென்று ஒரு தனி ரசிகர் பட்டாளமே உருவானது. வெளியிலும் ரசிகர்கள் லாஸ்லியா ஆர்மி என ஒரு தனி ஹேஷ்டேக்கை உருவாக்கினர்.
சிவந்த நிறம், மழலை பேச்சு, எதையும் தைரியமாக எதிர்த்து நிற்கும் திறமை என அத்தனை பாங்கமும் கொண்டவர். இவரின் இத்தனை திறமையையும் பார்த்து வெள்ளித்திரை இவரை அள்ளிக்கொண்டது.
மேலும் போட்டோசூட் நடத்தி ஒரு கலெக்ஷனையே சமூக வலைதளங்களில் நிரப்பிவரும் இவர் தற்போது தான் யோகா செய்யும் புகைப்படத்தை இன்ஸ்டாவில் பதிவிட்டு ரசிகர்களுக்கு புத்துணர்ச்சியூட்டியுள்ளார்.
© Behindglitz.com