சின்னத்திரையில் ஒளிபரப்பான ஆஹா, மாயா, தெய்வமகள், லட்சுமி வந்தாச்சு உள்ளிட்ட சீரியலில் நடித்தவர் வாணி போஜன். ஒரு கட்டத்தில் சீரியல் வேண்டாம் என முடிவெடுத்த அவர் சினிமா பக்கம் தாவினார்.
ஓ மை கடவுளே, லாக்கப், மலேசியா டூ அம்னீசியா உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்தார். ஜெய் நடித்த டிரிபிள்ஸ் என்கிற வெப் சீரியஸில் நடித்தார். மேலும், சூர்யா தயாரிப்பில் வெளியான ‘ராமே ஆண்டாலும் ராவணே ஆண்டாலும்’ படத்தில் பத்திரிக்கையாளராக நடித்திருந்தார். திறமையாக நடிக்கும் இவர் சரியான வாய்ப்புகளுக்காக காத்திருக்கிறார்.
ஒருபக்கம், சினிமா வாய்ப்பை பெற மற்ற நடிகைகள் செய்யும் அதே யுக்தியை கடைபிடிக்க துவங்கியுள்ளார். அதாவது, வித்தியாசமான உடைகளை அணிந்து போட்டோ ஷூட் செய்து அந்த புகைப்படங்களை தனது சமூக வலைத்தள பக்கங்களில் பகிர்ந்து வருகிறார். சில சமயம் சற்று கவர்ச்சியாகவும் அவர் உடை அணிந்து ரசிகர்களை சூடாக்கி வருகிறார்.
இந்நிலையில், சாதாரண காட்டன் புடவையில் அழகாக போஸ் கொடுத்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படங்கள் நெட்டிசன்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது.
© Behindglitz.com