Cinema news: ஓ.. இதுனால தான் பாகிஸ்தானுக்கு இந்த நிலைமையா Behind glitz

0
240


ஓ.. இதுனால தான் பாகிஸ்தானுக்கு இந்த நிலைமையா – அப்போ அடுத்த போட்டியிலாவது வெற்றி கிடைக்குமா?

இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையில் நடைபெற்ற போட்டியில் பாகிஸ்தான் தோல்வி அடைந்தது குறித்து அணியின் கேப்டன் சில தகவல்களை அளித்துள்ளார்.

இந்தியா vs பாகிஸ்தான்!

இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி நேற்று விறுவிறுப்பாக நடைபெற்றது. இந்த போட்டியில் இந்தியா பேட்டிங், பவுலிங் என அனைத்திலும் சிறப்பாக ஆடி வெற்றி பெற்றது. ஆனால் பாகிஸ்தான் அணி தொடக்கத்திலிருந்து சிறப்பாக விளையாடி வந்தது. ஆனால் பந்து வீச்சில் சில விக்கெட்டுகளை வீழ்த்த தவறியதால் அந்த அணிக்கு மிகப்பெரிய தோல்வி ஏற்பட்டது. இந்த தோல்வி குறித்து பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் சில முக்கிய தகவல்களை கூறியுள்ளார்.

டெலிக்ராம்: Behind glitz Tamil டெலிக்ராம்

அதாவது கடந்த டி20 உலக கோப்பையின் போது ஷாஹின் அப்ரிடி அபார பந்து வீச்சால் அனைத்து விக்கெட்டுகளையும் வீழ்த்தி அணிக்கு வெற்றியை தேடிக் கொடுத்துள்ளார். ஆனால் இந்த ஆசிய கோப்பையில் எங்கள் அணிக்கு துரதிஷ்டவசமாக அவருக்கு காயம் ஏற்பட்டு போட்டியில் பங்கேற்க முடியவில்லை. இதனால் அவருக்கு பதில் நசீம் ஷா அணியில் இடம் பிடித்துள்ளார். இவர் சிறப்பாக விளையாடி இந்திய அணியின் முக்கிய பேட்ஸ்மேன்களை எளிதாக வீழ்த்தினார்.

மேலும் டி20 தொடரில் கலக்கி வந்த சூர்யகுமார் யாதவை அருமையாக வீழ்த்தி பெவிலியனுக்கு வழி அனுப்பி வைத்தார். ஆனாலும் கடைசியில் பேட்டிங் செய்த ஹர்திக் பாண்டியாவை அவரால் வீழ்த்த முடியவில்லை. அந்த பேட்ஸ்மேனை அவர் வீழ்த்தி இருந்தால் கண்டிப்பாக நாங்கள் வெற்றி பெற்று இருப்போம் என பாபர் அசாம் பேட்டியளித்துள்ளார். மேலும் நேற்றைய போட்டியில் பேட்ஸ்மேன்கள் அனைவரின் பார்ட்னெர்ஷிப் சொதப்பலாக அமைந்தது. இதனால் இனி வரும் போட்டியில் சிறந்த பார்ட்னர்ஷிப் அமைத்து கண்டிப்பாக வெற்றி பெறுவோம் எனவும் கூறியுள்ளார்.

Previous articleவெள்ளித்திரை ரேஞ்சுக்கு ஹோட்டலை முன்னேற்றும் கதிர் முல்லை.., கெடுக்க முயற்சிக்கும் மல்லி! சூடுபிடிக்கும் கதைக்களம்!!



© Behindglitz.com