உலக மக்களை அச்சுறுத்தி வந்த கொரோனா வைரஸ் மீண்டும் மக்களை பாதித்து வருகிறது. இதனால் நம் நாட்டு மக்களை பாதுகாக்கும் பொருட்டு மத்திய, மாநில அரசு பல்வேறு கட்டுப்பாடுகள் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு சிகிச்சைகளை தீவிரப்படுத்தி வருகிறது.
அந்த வகையில் தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக மிகப்பெரிய அளவில் கொரோனா வைரஸால் மக்கள் பாதிக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது அதன் வேகம் குறைய தொடங்கியுள்ளது. மேலும் நேற்று மட்டும் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 320 தாக அதிகரித்து இருந்தது.
இந்நிலையில் இன்று கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 174 ஆக குறைந்துள்ளது. மேலும் மருத்துவமனையில் covid சிகிச்சை பெற்று வந்த ஒருவர் இன்று உயிரிழந்துள்ளார். இதுபோக தமிழகம் முழுவதும் 1870 பேர் .கொரோனா சிகிச்சை பெற்று வரும் நிலையில் 382 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
© Behindglitz.com