தமிழ், தெலுங்கு, ஹிந்தி மொழிகளில் நடித்து தென்னிந்திய நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. தமிழில் மிஷ்கின் இயக்கத்தில் ஜீவா நடித்த ‘முகமுடி’ படத்தில் மட்டும் நடித்திருந்தார்.
தெலுங்கில் அதிக படங்களில் நடித்துள்ளார். பாகுபலி புகழ் பிரபாஸுடன் அவர் நடித்துள்ள ‘ராதே ஷ்யாம்’ திரைப்படம் சமீபத்தில் வெளியானது.
மேலும், பல வருடங்களுக்கு பின் பீஸ்ட் படம் மூலம் கோலிவுட்டுக்கு திரும்பியுள்ளார். இப்படம் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களையும் அவர் கவர்ந்துள்ளார்.
தமிழில் நல்ல கதையம்சம் கொண்ட படங்களை தேர்ந்தெடுத்து நடித்தால் தமிழ் சினிமாவில் நயன்தாராவை போல ஒரு ரவுண்டு வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
© Behindglitz.com