Cinema news: நடிகர் சரத்பாபு திடீர் மறைவு…..,முதல்வர் முக ஸ்டாலின் இரங்கல்…., Behind glitz

0
12


நடிகர் சரத்பாபு திடீர் மறைவு…..,முதல்வர் முக ஸ்டாலின் இரங்கல்….,

தமிழ் சினிமாவில் பல்வேறு குணச்சித்திர கதாப்பாத்திரங்களில் நடித்து பிரபலமானவர் நடிகர் சரத்பாபு. தற்போது 71 வயதான நடிகர் சரத்பாபு தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் சுமார் 200 க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். குறிப்பாக, நடிகர் ரஜினிகாந்துடன் இணைந்து நடித்த முத்து, அண்ணாமலை உள்ளிட்ட திரைப்படங்கள் இவருக்கு மிகப்பெரிய வரவேற்புகளை கொடுத்தது.

இப்படி இருக்க, வயது மூப்பு காரணமாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட நடிகர் சரத்பாபு கடந்த ஏப்ரல் மாதம் 20 ஆம் தேதியன்று ஹைதராபாத்தில் உள்ள மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து ஒரு மாதம் வரைக்கும் சிகிச்சை மேற்கொண்டு வந்த நடிகர் சரத்பாபு இன்று சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்துள்ளார்.

என்னடா பொசுக்குன்னு குடும்பத்தை இழுத்துடீங்க…..,RCB ரசிகர்கள் செய்த காரியம்…,

அன்னாரது திடீர் மறைவுக்கு ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் பலரும் இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், தமிழக முதல்வர் முக ஸ்டாலின் நடிகர் சரத்பாபு மறைவுக்கு இரங்கல்களை தெரிவித்துள்ளார். மேலும், நடிகர் கமல்ஹாசன், விஜயகாந்த் ஆகியோரும் தங்களது ஆழ்ந்த வருத்தங்களை நடிகர் சரத்பாபு குடும்பத்தினருக்கு தெரிவித்துள்ளனர்.



© Behindglitz.com