Cinema news: பொண்ணுங்க குடிக்கறதும் தப்பில்ல.. அதை விளம்பரப்படுத்துறதும் தப்பில்ல…! பிரபல நடிகை ஓப்பன் டாக்! Behind glitz

0
88


சினிமா மட்டுமின்றி சமூகத்திலும் ஆண் பெண் என்ற பாகுபாடு இல்லாமல் அனைவரும் சமமாக நடத்தப்பட வேண்டும். ஒரு ஆண் ஒரு விஷயத்தை செய்தால் அதை சாதாரணமாக பார்க்கும் சமூகம் அதே விஷயத்தை ஒரு பெண் செய்தால் மட்டும் ஏன் தவறாக பேசுகிறது என பலரும் பாலின பாகுபாடு பேசி வருகிறார்கள்.

அந்த வகையில் தற்போது நடிகை ஒருவரும் மதுபான விஷயத்தில் இந்த பாகுபாடு குறித்து பேசியுள்ளார். அந்த நடிகை வேறு யாருமல்ல தமிழில் கோல்மால், இருவர் உள்ளம் போன்ற படங்களில் நடித்த பாயல் ராஜ்புட் தான். இவர் தெலுங்கில் ஆர்எக்ஸ் 100 என்ற படம் மூலம் அறிமுகமாகி தற்போது அங்கு டாப்பில் உள்ளார்.

இந்நிலையில் சமீபத்தில் சோசியல் மீடியாவில் உரையாடிய நடிகை பாயல், “நடிகைகள் மதுபான பிராண்டின் போஸ்டர் அல்லது விளம்பரத்தை தனது சமூக வலைத்தளத்தில் வெளியிடும்போது சில பழமைவாதிகள் அவர்களை கடுமையாக விமர்சிக்கிறார்கள்.

இதே காரியத்தை ஒரு நடிகர் செய்தால் யாரும் விமர்சிப்பது இல்லை. இதில் ஏன் ஆண் – பெண் வேறுபாடு பார்க்க வேண்டும். பெண்கள் பொழுதுபோக்கிற்காக மது அருந்துகிறார்கள். அதனால் பெண்கள் அதனை விளம்பரப்படுத்துவதில் தவறில்லை” என கூறியுள்ளார்.

தற்போது இவரின் இந்த கருத்து விவாதமாக மாறியுள்ளது. பலர் நடிகை பாயலின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் behindglitzஇணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்



© Behindglitz.com