நடிகர் அஜித் நடிக்க இருக்கும் விடாமுயற்சி படத்தை குறித்து சமூக வலைத்தளங்களில் முக்கியமான அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது.
விடாமுயற்சி:
தென்னிந்திய தமிழ் சினிமாவில் நம்பிக்கை நட்சத்திரமாக ஜொலித்து கொண்டிருப்பவர் தான் நடிகர் அஜித்குமார். இவர் நடிப்பில் கடைசியாக வெளியான துணிவு திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று வசூலையும் வாரி குவித்தது. இப்படத்தை தொடர்ந்து அஜித் யார் இயக்கத்தில் நடிக்க போகிறார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில், மகிழ் திருமேனி இயக்கத்தில் விடா முயற்சி என்ற படத்தில் அஜித் நடிக்க இருக்கிறார் என்று லைகா நிறுவனம் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டனர்.
இந்நிலையில் இப்படத்தை குறித்து முக்கியமான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது, விடாமுயற்சி படத்தின் ஷூட்டிங் வருகிற மே 22ம் தேதி சென்னையில் ஆரம்பிக்க இருப்பதாக சொல்லப்படுகிறது. தற்போது அஜித் நேபாள் மற்றும் பூட்டான் பைக் டூரில் பிசியாக இருந்து வரும் நிலையில் விடாமுயற்சி படப்பிடிப்பு மொத்தம் 70 நாட்கள் எடுப்பதாக சொல்லப்படுகிறது. மேலும் படப்பிடிப்புக்கு அஜித் டூரை முடித்து கலந்து கொள்வார் என்று கூறப்படுகிறது. இதில் அஜித்தின் பகுதி 40 நாட்கள் படப்பிடிப்பை நடத்த முடிவு செய்துள்ளதாகவும் கோலிவுட்டில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.
The post போட்றா வெடிய.., “விடாமுயற்சி” படத்தின் ஷூட்டிங் தேதி வெளியீடு – உற்சாகத்தில் அஜித் ரசிகர்கள்!! appeared first on Behind glitz – Tamil.
© Behindglitz.com