கோயம்பத்தூர் மாவட்டத்தில் உள்ள டாப்சிலிப் பகுதியில் அமைந்துள்ளது கோழிகமுத்தி யானைகள் காப்பகம். இதை சுற்றுலா துறை அமைச்சர் மதிவேந்தன் விசிட் செய்துள்ளார். அப்போது அந்த காப்பகத்தில் உள்ள யானைகளின் உடல நலம் மற்றும் அவைகளுக்கு வழங்கப்படும் உணவு குறித்து விசாரித்தார்.
இதையடுத்து அங்குள்ள யானை பாகன்களிடம் அவர்கள் குறைகளை கேட்டுள்ளார். அப்போது அவரிடம் 19 தாற்காலிக பாகன்களின் பணிகளை நிரந்தரம் செய்ய வேண்டுகோள் விடுத்தனர். இதன் பிறகு செய்தியாளர்ளுக்கு பேட்டி கொடுத்த அவர் கோழிகமுத்தி, முதுமலை உள்ளிட்ட காப்பகங்களுக்கு முதலமைச்சர் 5 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாகவும், மேலும் காப்பக பணியாளர்களுக்கு 10 லட்சம் மதிப்பில் வீடு கட்டி தரவுல்லதாகவும் அறிவித்துள்ளார்.
டிவிட்டர் : Behind glitz Tamil ட்விட்டர்
மேலும் மலை கிராமங்களில் வாழும் மக்கள் மின்சார வசதியினை பெற ஒருபோதும் வனத்துறை தடையாக இருக்காது என உறுதியளித்துள்ளார். மேலும் மின்சார வசதி தேவைப்படுவோர் உரிய ஆவணங்களுடன் மின்சார துறையை அதிகாரிகளிடன் ஒப்படைக்கும் படி கேட்டுக்கொண்டுள்ளார். ஊர் எல்லைகளில் உள்ள வன பகுதியில் யானைகளுக்கு பிடிக்காத பயிர்களை சாகுபடி செய்யும் படியும், மேலும் பயிர்களை யானைகள் சேதப்படுத்தும் நிலையில் அதற்கு உரிய நிவாரணத்தை அரசாங்கம் கொடுக்கும் எனவும் கூறியுள்ளார்.
© Behindglitz.com