தனது காந்த குரலால் அனைவரையும் தன் பக்கம் ஈர்த்தவர் நடிகை ஆண்டிரியா. கண்ணும் கண்ணும் நோக்கியா, கூகுள் கூகுள் பண்ணிபாத்தேன் போன்ற பாடல்கள் அவரின் கெரியரை தூக்கி விட்ட பாடல்களுள் முக்கியமானது. அவரின் அழகை பாத்து நடிப்பதற்கும் வாய்ப்பும் வந்தது.
பச்சைக்கிளி முத்துச்சரம் மூலம் நடிகையாக அறிமுகமானார். பின்னர் ஆயிரத்தில் ஒருவன் படத்தில் சைலன்டான டாக்டர் லேடியாக கலக்கியிருப்பார். வட சென்னை படத்தில் பக்கா லோக்கலாக மெருகேற்றியிருப்பார். தரணி படத்தில் ஐடி ஊழியராக வலம் வந்திருப்பார்.
நடிக்கும் ஒவ்வொரு படத்திலும் அவரின் கடுமையான உழைப்பை பார்க்க முடிந்தது. இது ஒரு பக்கம் இருந்தாலும் தன் வசிய குரலாலும் எல்லாரையும் மயக்கி வருகிறார். சமீபத்தில் கூட புஷ்பா படத்தில் ஊ சொல்றியா பாடலை பாடி இளசுகளை தன் பக்கம் சுண்டி இழுத்தார்.
அவ்வப்போது தனது புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வரும் இவர் தற்போது ஜிம்மில் உடற்பயிற்சி செய்யும் புகைப்படங்களை இன்ஸ்டாவில் பதிவிட்டு ரசிகர்களை மிரட்டி வருகிறார்.
© Behindglitz.com