நடிகை சாக்ஷி அகர்வால் தெரியாதவர் இணையத்தில் இருக்க மாட்டார்கள். அந்த அளவுக்கு சாக்ஷி அகர்வால் மிகவும் ஃபேமஸ், பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் ஓரளவு தெரிந்த முகமாக மாறியிருந்த சாக்ஷி.
அதன் பின்னர் இன்ஸ்டாகிராம் பதிவின் மூலம் தினம் ஒரு புகைப்படம் வெளியிட்டு பல்வேறு இணையவாசிகள் மனதை கவர்ந்து விட்டார் சாக்ஷி அகர்வால். அவ்வப்போது அரண்மனை, விசுவாசம் போன்ற சில திரைப்படங்களிலும் நடித்து தான் ஒரு நடிகை என்பதையும் அவ்வப்போது காட்டி வருகிறார்.
இவர் அண்மையில் ஒரு நிகழ்ச்சிக்கு சென்று இருக்கையில் இவரிடம் பல கேள்விகள் கேட்கப்பட்டது. அப்போது, நீங்கள் சமீபத்தில் கூகுளில் தேடிய சம்பவம் எது என்று கேட்கப்பட்டது . அதற்கு, தன்னை பற்றிய வதந்தி ஏதேனும் வந்திருக்கிறதா என்பதை பற்றி நான் கூகுளில் தேடி பார்த்தேன். ஒரு செய்தி என்னை மிகவும் வியக்க வைத்தது.
இதையும் படியுங்களேன்-உங்களுக்கு அதுதான் பெஸ்ட்…பாராட்டிய கமல்… 28 வருடம் கழித்து வெளியான உண்மை….
அது என்னவென்றால் விராட் கோலியின் முதல் பெண் தோழி (கேர்ள் பிரண்ட்) சாக்ஷி அகர்வால் தான் என செய்தி போடப்பட்டிருந்தது. அதனை கண்டு நான் அதிர்ச்சியானேன் என வெளிப்படையாக தெரிவித்தார்.
அதற்கு அந்த கேள்வியைக் கேட்டவர், நீங்கள் ஒரு சாயலில் அனுஷ்கா சர்மா போல தான் இருக்கிறீர்கள். அதனால் தான் இந்த பதிவை போட்டிருப்பார்கள் என்று கொஞ்சமும் யோசிக்காமல் பதில் கூறினார். அதற்கு சிரித்துக்கொண்டே உள்ளே சென்று விட்டார்.
© Behindglitz.com