நடிகர் விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகும் ‘லியோ’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். ஆக்ஷன் த்ரில்லர் வகையில் உருவாக்கப்பட்டு வரும் இந்த படத்தில் விஜயுடன் இணைந்து நடிகை த்ரிஷா, ப்ரியா ஆனந்த், இயக்குனர் மிஸ்கின், கவுதம் வாசுதேவ் மேனன் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்து வருகின்றனர்.
இந்த படத்திற்கான படப்பிடிப்பு கிட்டத்தட்ட இறுதிக் கட்டத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறது. இதையடுத்து, நடிகர் விஜய் தனது அடுத்த படத்தில் இயக்குனர் வெங்கட் பிரபுவுடன் கை கோர்க்க இருப்பதாக சில தகவல்கள் வெளிவந்துள்ளது. மேலும், இந்த படத்திற்கு யுவன்சங்கர் ராஜா இசையமைக்க இருப்பதாகவும் சொல்லப்பட்டுள்ளது.
கேன்ஸ் திரைப்பட விழாவில் நடிகை குஷ்பூ….,வைரலாகும் புகைப்படங்கள்….,
இது நடந்தால், இயக்குனர் வெங்கட் பிரபுவுடன் முதன் முறையாக நடிகர் விஜய் கை கோர்க்க வாய்ப்புள்ளது. இப்போது, நடிகர் விஜய் நடிக்க இருக்கும் இந்த படத்திற்கு அவருக்கு ரூ.200 கோடி சம்பளம் வழங்க படக்குழு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது. இந்த தொகை இந்திய திரையுலகில் நடிக்கும் எந்தவொரு பிரபலங்களுக்கும் கொடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
© Behindglitz.com