விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி 3 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றுள்ள, ரோஷ்ணி மற்றும் ஸ்ருதிகா இருவரும் விஜய் பட பாடலுக்கு குத்தாட்டம் போட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.
வைரல் வீடியோ:
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும், ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் ஒன்று குக் வித் கோமாளி . இதன் 2 சீசன் நிறைவடைந்துள்ள நிலையில் தற்போது 3வது சீசன், பிரம்மாண்டமாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்த, சீசனில் பல புது கோமாளிகள் களம் இறங்கியுள்ளனர். மொத்தம் 10 போட்டியாளர்களுடன் தொடங்கிய இந்த நிகழ்ச்சி, தற்போது 7 போட்டியாளர்களுடன் ஒளிபரப்பாகி வருகிறது.
இந்நிலையில், விஜய்யின் ஜாலியோ ஜிம்கானா பாடலுக்கு இந்த நிகழ்ச்சியின் போட்டியாளர்கள் ரோஷினி மற்றும் ஸ்ருதிகா இருவரும் குத்தாட்டம் போட்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. இதுகுறித்து, கருத்து பதிவிட்ட ஸ்ருதிகா “உங்களில் யார் அடுத்த பிரபுதேவா டைட்டில் வின்னர் மை டியர் ரோஸ் குட்டி” என கேப்சனில் பதிவிட்டுள்ளார். மேலும், ஷூட்டிங்கில் தாங்கள் இருவரும் ஒரே காஸ்டியூமில் சந்தித்து கொண்டதன் விளைவு தான் இந்த உற்சாக நடனம் என்றும் தெரிவித்துள்ளார். தற்போது இந்த வீடியோ பயங்கரமாக வைரலாகி வருகிறது.
வாட்ஸ் அப்: Behind glitz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Behind glitz Tamil டெலிக்ராம்
உடனடி செய்திகளுக்கு – எங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்
ஃபேஸ்புக் : Behind glitz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Behind glitz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Behind glitz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Behind glitz Tamil யுடியூப்
Behind glitz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Behind glitz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்
© Behindglitz.com