நாட்டில் பெண்களுக்கு எதிரான பாலியல் தொந்தரவுகளை தடுக்க மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தும் வகையில் 3 வயது சிறுமியை பலாத்காரம் செய்ததாக 10 வயது சிறுவன் ஒருவர் குற்றம் சுமத்தப்பட்டுள்ளார்.
இன்ஸ்டாகிராம் : Behind glitz Tamil இன்ஸ்டாகிராம்
இச்சிறுவன் உத்திரபிரதேச மாநிலம் முசாபர் நகரில் உள்ள பள்ளியில் படித்து வருகிறான். அதே பள்ளியில் பயின்று வரும் 3 வயது சிறுமியை சாக்லேட் வாங்கி தருவதாக கூறி மறைவான இடத்திற்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு பாலியல் பலாத்காரம் செய்துள்ளதாக சிறுமியின் பெற்றோர்கள் போலீசாரிடம் புகார் தெரிவித்துள்ளனர்.
நாடு முழுவதும் திடீரென வீழ்ச்சி கண்ட கொரோனா பாதிப்பு., பொதுமக்கள் மகிழ்ச்சி!!!
அதன் பேரில் பாதிக்கப்பட்ட சிறுமியை மருத்துவ பரிசோதனைக்காக அனுப்பி வைத்துவிட்டு சிறுவனை கஸ்டடியில் வைத்து விசாரித்து வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த திடுக்கிடும் சம்பவம் அறிந்த அப்பகுதி மக்கள் உள்ளிட்ட பலரும் பெரும் அதிர்ச்சியில் உள்ளனர்.
© Behindglitz.com