மத்திய ரிசர்வ் போலீசில் (CRPF) 9,212 கான்ஸ்டபிள் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளிவந்துள்ளது. 21 முதல் 27 வயதுக்குள் உள்ள 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் இப்போட்டி தேர்வுக்கு விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. வயது வரம்பில் தளர்வுகளும் உண்டு. இதில் கணினி தேர்வு, பிஸிக்கல் டெஸ்ட், Efficiency Test, Trade Test மற்றும் ஆவண சரிபார்ப்பு மூலம் தேர்ந்தெடுக்கப்பட உள்ளார்கள்..
விருப்பமுள்ளவர்கள் ஏப்ரல் 25ம் தேதிக்குள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்பிக்கவும் தெரிவித்துள்ளனர்..இதில் தேர்வர்களுக்கு கணினி தேர்வு ஆங்கிலம் மற்றும் ஹிந்தி மொழிகளில் மட்டுமே தேர்வு எழுத வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மத்திய அமைச்சர் அமித்ஷாவுக்கு கோரிக்கை கடிதம் எழுதி உள்ளார்.
இன்ஸ்டாகிராம் : Behind glitz Tamil இன்ஸ்டாகிராம்
அதாவது, “CRPF கணினி தேர்வில் ஆங்கிலம் மற்றும் இந்தியில் மட்டும் தேர்வு எழுத அனுமதிப்பது தேர்வர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எனவே தமிழ் உள்ளிட்ட மற்ற மாநில பிராந்திய மொழிகளிலும் தேர்வு எழுதும் வாய்ப்பை வழங்க வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.
© Behindglitz.com